கடகம்:
எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி
சொல்லும் கடக ராசி வாசகர்களே நீங்கள் எப்போதும் அன்புக்கு
கட்டுப்பட்டுவர்கள். தன் குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள்.
இதுவரை உங்களது ராசிப்படி லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தில் கேதுவும்,
பூர்வபுண்ணியஸ்தானமான 5ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது
ஜீவனஸ்தானமான 10ம் இடத்திற்கும், ராகு சுகஸ்தானமான 4ம் இடத்திற்கும்
பெயர்ச்சி ஆகிறார்கள்.