ராகு கேது பெயர்ச்சி சம்பந்தமான எங்களது விளக்கங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Thursday, November 29, 2012

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னி:

பிறரிடம் நல்அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே உங்களின் மென்மையான குணத்தால் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவீர்கள். மேலும் அனைவரையும் சீக்கிரமாகவே நம்பும் வெள்ளைமனம் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தைரிய வீர்ய ஸ்தானமான மூன்றாமிடத்தில் ராகுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இருந்தார்கள். இனி கேது ஆயுள்ஸ்தானமான 8ம் இடத்திற்கும், ராகு தனவாக்கு குடும்பஸ்தானமான 2ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்:

தன்னம்பிக்கையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிகாட்டி என்பதை மற்றவர்களுக்கு தங்களது செயலால் உணர்த்தும் சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள்.எந்த வேலை செய்தாலும் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தில் கேதுவும்,  சுகஸ்தானமான 4ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது பாக்கியஸ்தானமான 9ம் இடத்திற்கும், ராகு தைரியவீர்யஸ்தானமான 3ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கடகம்:

எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்லும் கடக ராசி வாசகர்களே நீங்கள் எப்போதும் அன்புக்கு கட்டுப்பட்டுவர்கள். தன் குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தில் கேதுவும்,  பூர்வபுண்ணியஸ்தானமான 5ம் இடத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது ஜீவனஸ்தானமான 10ம் இடத்திற்கும், ராகு சுகஸ்தானமான 4ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

மிதுனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்:

சீரியசிந்தனையும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுனராசி அன்பர்களே யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று மூன்னேற வேண்டும் என துடிப்பவர்கள் நீங்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி அயனசயனபோக ஸ்தானத்தில் கேதுவும், 6ம் இடத்தில் ரணருணரோகஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது லாபஸ்தானமான 11ம் இடத்திற்கும், ராகு பூர்வபுண்ணியஸ்தானமான 5ம்  இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.


ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் மூன்று

ரிஷபம்:

பொறுமையாக நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பை செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். 

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் கேதுவும், 7ம் இடத்தில் களத்திரஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது அயனசயனபோகஸ்தானமான 12ம் இடத்திற்கும், ராகு ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 

மேஷம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்:

எதற்கும் அஞ்சாத குணம் கொண்ட மேஷ ராசி வாசகர்களே, நீங்கள் மேன்மையுடனும், கீர்த்தியுடனும், புகழுடனும் விளங்குவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி 2ம் இடத்தில் கேதுவும், 8ம் இடத்தில் ராகுவும் இனி கேது ராசிக்கும், 7ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் ஒன்று

அன்பின் சொந்தங்களுக்கு,

வணக்கம்.

அப்பப்பா....இந்த ராகு கேது பெயர்ச்சி வந்தாலும் வந்தது. எனக்கு நேரம் சரியில்லை போலும். இட்லிவடையில் ஒரு லிங்க் போட்டு ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமத்திற்கு இடுகை கொடுத்தால் அனைவரும் அதை பலன்களுக்கான லிங்க் என நினைத்து விட்டனர் போலும். 


எங்களுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலைமைக்கு நாங்கள்தான் காரணம். இனி இதுபோன்று நடவாது. என்ன செய்வது? ஒவ்வொரு பாடமும் அனுபவமே.

முதலில் எங்களது முன்னோர்களுக்கும்,  எங்களது குரு ஸ்ரீகுப்பு ஜோஸ்யருக்கும், எங்களது வளர்ப்புப் பெற்றோர்கள் ப்ரும்மஸ்ரீவேங்கடாஜலம் - கற்பகம் தம்பதியருக்கும், எங்களது பெற்றோர் ஸ்ரீசுப்பிரமணியன் - கோமதி(உமா) தம்பதியருக்கும், ஸ்ரீமஹாகணபதிக்கும், அருள்மிகு ஸ்ரீமதிகமலவல்லி ஸ்ரீமதிகுழந்தைவல்லி ஸமேத ஸ்ரீமாயக்கூத்தருக்கும், அருள்மிகு ஸ்ரீகோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீதிருவழூதீஸ்வரருக்கும், ஸ்ரீபத்திரகாளிக்கும், ஸ்ரீசொரிமுத்தையனாருக்கும், ஸ்ரீமுருகனுக்கும் நமஸ்காரங்கள். 

இனி ராகு கேது பெயர்ச்சி பலன்களுக்குச் செல்வோம்....

நிகழும் மங்களகரமான நந்தன வருஷம் தக்ஷிணாயனம் சரத்ரிது கார்த்திகை மாதம் 17ம் தேதி(02-12-2012) ஞாயிற்றுக்கிழமையும், கிருஷ்ண சதுர்த்தியும், புனர்பூசம் நக்ஷத்ரமும் சுப்ரம் நாம யோகமும் பவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி காலை 10.53க்கு மகர லக்னத்தில் ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷபத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.

ராகுவின் பார்வை:


கேதுவின் பார்வை:




இதனால் ஏற்படும் லோக பலன்கள்:

அரசு சார்ந்த கட்சியும், எதிரணியும் மீண்டும் பலம் பெற்று உயிர்த்தெழும். மக்கள் அநேக சலுகைகளை பெற்று இன்புற மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி ஒளிபிறக்கும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். செவ்வாய் வீட்டில் கேது அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். பூமியின் விலை அதிக அளவிற்கு விலை போகும்.  மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். நாட்டையே உலுக்கும் அளவுக்கு சில சம்பவங்கள் ஏற்படலாம். ஆலயங்களில் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். வயல்வெளி பரப்பில் உள்ள முட்டையிடும் ஜீவராசிகள் கடுமையாக பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் 2013ஆம் ஆண்டு வைகாசிக்கு மேல் முறைப்படி சமாதானம் ஏற்படும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.  புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.    இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற  இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். அண்டை நாடுகள் அடிக்கடி மறைமுகமாக தாக்குதல்கள் நடத்துதலும் அதனை நமது அரசு சாதுர்யமாக கையாழுதலுமாக இருக்கும். எல்லைகளில் நமது இராணுவம் கண்கானிப்பைப் பலப்படுத்தும்.  நாட்டின் பொருளாதாரம் அவ்வப்போது கடுமையாக பாதிக்கப்பட்டாலும் மே 2013க்குப் பின் மிக வலுவான நிலையை அடையும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் மழை அதிகமாக பொழிந்து சேதம் விளைவிக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். மே 2013க்குப் பின் யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். புதிதாக ஒரு கிரகத்தை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடிப்பார்கள். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

Wednesday, November 14, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது என்றால் யார்?
ராகு கேது வின் பணிகள் என்னென்ன?
அவர்கள் எவ்வாறு பயணம் செய்வார்கள்?
அவர்களின் பயோடேட்டா?
அவர்கள் எங்கிருந்து எங்கே மாறுகிறார்கள்?
பொதுப் பலன்கள் என்னென்ன?
லக்ன ரீதியான பலன்கள் என்னென்ன?
திசாபுக்தி ரீதியான பலன்கள் என்னென்ன?
களத்திரதோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் ராகு கேதுவால் ஏற்பட்டால் அதற்குண்டான சரியான பரிகாரம் என்ன?
திருநாகேஸ்வரம், திருப்பாம்புபுரம், ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்தும் கல்வி, திருமணம், சந்தாண பாக்கியம், வேலை, வெளிநாடு வாய்ப்பு போன்றவை தள்ளிப் போவது ஏன்?


இது போன்ற அனைத்து கேள்விகளுக்கு சரியான முறையில் அடுத்த சில நாட்களில் பலன்களும் கட்டுரைகளும் வெளிவரப்போகிறது.

காத்திருக்கவும்.

---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம், ஆன்மீகம்: http://kuppuastro.blogspot.com/
நவக்கிரங்கள்: http://nava-graham.blogspot.in/
ராகு கேது: http://rahukethupeyarchi.blogspot.in/