ராகு கேது பெயர்ச்சி சம்பந்தமான எங்களது விளக்கங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Wednesday, December 5, 2012

மீனம் - ராகு கேது பெயர்ச்சி

மீனம்:

எவரிடமும் முடிந்தவரை சிக்கிக் கொள்ளாமல் விலகிக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே எந்த பிரச்சனைகளையும் சந்திப்பதற்கு முன் மிகுந்த யோசனைகளை செய்து முடிவெடுத்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி தைரியவீர்ய மூன்றாமிடத்தில் கேதுவும், பாக்கியஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தனவாக்குகுடும்ப ஸ்தான இரண்டாமிடத்திற்கும், ராகு ஆயுள்ஸ்தான எட்டாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி

கும்பம்:

அடுத்தவரின் மனதை எளிதில் அறிந்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நிறைகளை எந்த அளவிற்கு காண்பீர்களோ அதே போன்று குறைகளையும் கண்டு கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி சுகஸ்தான நான்காமிடத்தில் கேதுவும், தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தைரியவீரிய ஸ்தான மூன்றாமிடதிற்கும், ராகு பாக்கியஸ்தான ஒன்பதாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

மகரம் - ராகு கேது பெயர்ச்சி

மகரம்:

எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் எதிலும்  தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி பஞ்சமபூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தில் கேதுவும், லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து அருளாட்சி கொடுத்தார்கள். இனி கேது சுகஸ்தான நான்காமிடத்திற்கும், ராகு கர்மஜீவனஸ்தான பாத்தாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - பாகம் பத்து

தனுசு:

எதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் அங்கிங்கு சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது.

இதுவரை உங்களது ராசிப்படி ரணருணரோகஸ்தானமான ஆறாமிடத்தில் கேதுவும், விரையஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து இருந்து பலன்கள் கொடுத்தார்கள். இனி கேது பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தான ஐந்தாமிடதிற்கும், ராகு லாபஸ்தான பதினொன்றுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்:



”தேளானைப் போற்றிக் கொள்” என்பதற்கேற்ப யாரும் உங்களை சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் தீண்டிவிடுவீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி ராசியில் ராகுவும், களத்திரஸ்தானமான ஏழாமிடத்தில் கேதுவும் வீற்றிருந்தார்கள். இனி கேது ரணருணரோகஸ்தானமான 6ம் இடத்திற்கும், ராகு விரையஸ்தான பன்னிரெண்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.