ராகு கேது பெயர்ச்சி சம்பந்தமான எங்களது விளக்கங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Friday, October 12, 2012

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி

நிகழும் மங்களகரமான நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 17ம் தேதி(02-12-2012) அன்று காலை 11.10க்கு ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷபத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.



உத்தம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு

மத்யம பலம் பெறும் ராசிகள்: மிதுனம், ஸிம்ஹம், மகரம், கும்பம்

அதம பலம் பெறும் ராசிகள்: மேஷம், கன்னி, துலாம், மீனம்



இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம். 
மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் ராகு - கேது திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் அஸ்வதி, மகம், மூலம், திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம், கார்த்திகை, விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகிய நபர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். 
திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க கலந்து கொள்ளுங்கள்.    இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 02.12.2012 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.  
அன்று மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ராகு கேதுப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜையும் நடைபெறுகிறது. 
இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்குக் கட்டணம்: ரூபாய்.100/- மட்டும். ஹோமத்தன்று சரியாக காலை 7 மணி முதல் ஸங்கல்பம் ஆரம்பிக்கப்படும்.ஒவ்வொருவரையும் தனித்தனியாக உட்கார வைத்து ஸங்கல்பம் செய்யப்படும்.
பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். இதில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கட்டணத்தை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்: தினமணி மற்றும் தினகரன் புகழ் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்

பிரசாத செட்:

[1] தாங்கள் தினமும் அணிந்து கொள்ளத்தக்க ஸ்ரீசக்கரம் டாலர். - 27 நாட்கள் ஸ்ரீலலிதாம்பிகா த்ரிசதி பூஜை செய்து செறிவூட்டப் பெற்றது.

[2] ஹோம ரக்ஷை

[3] ஹோம பிரசாத கயிறு

[4] ஹோமத்தில் இடப்பட்ட நாணயம் ஒன்று

[5] அக்ஷதை

[6] குங்குமம்

குறிப்பு:
நம்மிடம் ஏற்கனவே சனிப் பெயர்ச்சி மஹாயாகம், குருப் பெயர்ச்சி மஹாயாகம், புரட்டாசி சனிக்கிழமை ஸகஸ்ரநாம பாராயணம், நவராத்திரி ஸங்கல்பம் ஆகியவற்றில் பெயர் கொடுத்தவர்களுக்கு விசேஷ சலுகையாக ரூபாய். 60 மட்டும் வசூலிக்கப்படும். ஆனால் இந்த விசேஷ அர்ச்சனை பரிகாரம் நபர் ஒருவருக்கு மட்டுமே. மேலும் உங்களுக்கு ஸ்ரீசக்ர டாலர் மற்றும் கையில் அணிந்து கொள்ள கயிறு விசேஷ தினத்தன்று கோவிலில் விற்கப்படும். நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு:
இமெயில்:      ramjothidar@gmail.com