ராகு கேது பெயர்ச்சி சம்பந்தமான எங்களது விளக்கங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Wednesday, October 17, 2012

கேது கிரகம் - பயோடேட்டா

கேது கிரகம் - பயோடேட்டா




நிறம் - சிவப்பு
 குணம் - குரூரம்
மலர் - செவ்வல்லி
ரத்தினம் - வைடூரியம்
உருவம் - ஐந்து பாம்புத் தலை, அசுர உடல்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 1 1/2 வருஷம்
வஸ்திரம் - பல வண்ணங்கள் சேர்ந்தது, சிலர் சிவப்பு என்பர்
க்ஷேத்திரம் - ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், இரட்டைத் திருப்பதி மற்றும் புற்றுக் கோவில்கள்
ஆசனம் - கொடி
ஸமித்து (ஹோமக் குச்சி) - தெர்ப்பை
நைவேத்தியம் -  கொள்ளு கஞ்சி அல்லது பாயாசம்
தேசம் - அந்தர்கேதி
தேவதை - விநாயகர், இந்திரன், சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - நான்முகன்
திசை - வடமேற்கு
வடிவம் - கொடி வடிவம்
வாகனம் - சிங்கம்
தானியம் - கொள்ளு
உலோகம் - துருக்கல்
காலம் - எமகண்டம் (அட்டவனையை கீழே கொடுத்திருக்கிறோம்)
கிழமை - செவ்வாய்க்கிழமை (கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பிணி - பித்தம்(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
சுவை  - புளிப்பு(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன்(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பகை கிரகங்கள் - சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - வளர்பிறை சந்திரன், புதன், குரு
காரகம் - மாதாமகர் (பாட்டனார் - அம்மாவின் அப்பா), சிலர் மாதாவழி தாயாரையும் குறிப்பிடுவதாக கூறுவர்.
தேக உறுப்பு - உள்ளங்கால்
நக்ஷத்திரங்கள் - அசுபதி, மகம், மூலம்
திசை வருடம் - 7 ஆண்டுகள்
மனைவி - சித்ரலேகா
உபகிரகம் - தூமகேது


தோத்திரங்கள்

கேது த்யான ஸ்லோகம்

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் தௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்!


கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்!

கேது துதி

  பொன்னையன் வரத்திற் கொண்டோன் புலவர் தம்பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற
பின்னை நின் கரவாலுண்ட பெட்பிணிற்சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேது தேவே எம்மை இனி இரட்சிப்பாயே! 

No comments:

Post a Comment